மார்ச் 31 முதல் ஏப்ரல் 3 வரை அஞ்சலகங்களில் பணப் பரிவர்த்தனை சேவைகளில் மாற்றம்
தூத்துக்குடி, 26 மார்ச் (ஹி.ச.) நிதி ஆண்டு கணக்கு முடித்தல் மற்றும் அடுத்தடுத்து வரும் அரசு விடுமுறைகள் காரணமாக, மார்ச் 31 முதல் ஏப்ரல் 3 வரை அஞ்சலகங்களில் பணப் பரிவர்த்தனை சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவில்பட்டி கோட்ட அ
Changes to Financial Transaction Services


தூத்துக்குடி, 26 மார்ச் (ஹி.ச.)

நிதி ஆண்டு கணக்கு முடித்தல் மற்றும் அடுத்தடுத்து வரும் அரசு விடுமுறைகள் காரணமாக, மார்ச் 31 முதல் ஏப்ரல் 3 வரை அஞ்சலகங்களில் பணப் பரிவர்த்தனை சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து கோவில்பட்டி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் எஸ். சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மார்ச் 31 (செவ்வாய்): மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு அஞ்சலகங்களுக்கு அரசு விடுமுறை.

ஏப்ரல் 1 & 2 (புதன், வியாழன்): பழைய நிதி ஆண்டு கணக்கு முடித்தல் மற்றும் புதிய நிதி ஆண்டு தொடக்கப் பணிகள் நடைபெறுவதால், அஞ்சலகங்களில் எந்தவிதமான பணப் பரிவர்த்தனைகளும் (பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல்) நடைபெறாது.

டிஜிட்டல் சேவைகள்: ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் அஞ்சலக இணையதள வங்கி (Internet Banking) மற்றும் கைபேசி வங்கி (Mobile Banking) சேவைகளும் செயல்படாது.

ஏப்ரல் 3 (வெள்ளி): புனித வெள்ளியை முன்னிட்டு அஞ்சலகங்களுக்கு விடுமுறை.

தபால் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்:

பணப் பரிவர்த்தனைகள் நடைபெறாத ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், தபால் புக்கிங் (Post Booking) மற்றும் பட்டுவாடா (Delivery) சேவைகள் எந்தவித தடையுமின்றி வழக்கம் போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்:

தொடர் விடுமுறை மற்றும் கணக்கு முடித்தல் பணிகளால் பணப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படவுள்ளதால், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பணத் தேவைகளை முன்னரே திட்டமிட்டு அஞ்சலகங்களை அணுகிச் சேவைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b