சித்திரை நவராத்திரி எட்டாம் நாள் - டெல்லி ஜண்டேவாலன் தேவி கோவிலில் அதிகாலை பக்தர் கூட்டம்
புதுடெல்லி, 26 மார்ச் (ஹி.ச.) சித்திரை நவராத்திரியின் எட்டாவது நாளையொட்டி, டெல்லியில் உள்ள மாதா ஜண்டேவாலன் தேவி கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தேவியின் அருளாசியைப
சித்திரை நவராத்திரி எட்டாம் நாள் -  டெல்லி ஜண்டேவாலன் தேவி கோவிலில் அதிகாலை பக்தர் கூட்டம்


புதுடெல்லி, 26 மார்ச் (ஹி.ச.)

சித்திரை நவராத்திரியின் எட்டாவது நாளையொட்டி, டெல்லியில் உள்ள மாதா ஜண்டேவாலன் தேவி கோவிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பெருமளவில் திரண்டனர்.

பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தேவியின் அருளாசியைப் பெறவும் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்துக்கள் ஆண்டுதோறும் நான்கு நவராத்திரிகளை அனுஷ்டித்தாலும், சித்திரை நவராத்திரி மற்றும் சாரதிய நவராத்திரி ஆகியவை மட்டுமே நாடு முழுவதும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாக்கள் பருவ மாற்றங்களுடன் தொடர்புடையவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நவராத்திரி திருவிழா இந்தியா முழுவதும் பல்வேறு மரபுகளிலும் வழக்கங்களிலும் கொண்டாடப்படுகிறது. ‘ராம நவராத்திரி’ என்றும் அழைக்கப்படும் இந்த ஒன்பது நாள் விழா, பகவான் ராமரின் பிறந்தநாளான ராம நவமியுடன் நிறைவடைகிறது.

இந்த ஒன்பது நாட்களிலும், தேவி சக்தியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடப்படுகின்றன. தேவியின் பல்வேறு வடிவங்களை முன்னிறுத்தும் சடங்குகள், பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளுடன் இவ்விழா பக்தியுடன் அனுஷ்டிக்கப்படுகிறது.

பகவான் ராமர் மனித மற்றும் தெய்வீக வடிவத்தில் அவதரித்த தினமே ராம நவமி. இந்நாள் நாடு முழுவதும், குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தின் புனித நகரமான அயோத்தியில், சிறப்பு வழிபாடுகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் அனுஷ்டிக்கப்படுகிறது.

ராம நவமியை முன்னிட்டு, சித்திரை நவராத்திரி காலத்தில் பக்தர்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். இந்த விரதத்தில் மது மற்றும் புகைப்பழக்கங்களைத் தவிர்த்தல், சாத்வீக சைவ உணவு மட்டுமே உட்கொள்ளுதல், தியானம் மற்றும் பிரார்த்தனையில் ஈடுபடுதல் போன்றவை இடம்பெறுகின்றன.

ஒன்பதாம் நாளான ராம நவமியன்று, பகவான் ராமரின் பிறப்பிடமாகக் கருதப்படும் அயோத்தி நகரம் முழுவதும் ஆன்மீக உற்சாகத்தால் நிரம்பி வழிகிறது.

ராம நவமி, பகவான் ராமரின் வாழ்க்கை மற்றும் அவருடைய நெறிமுறைகளை நினைவுகூரும் முக்கிய ஆன்மீக விழாவாகக் கருதப்படுகிறது.

Hindusthan Samachar / JANAKI RAM