Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 26 மார்ச் (ஹி.ச.)
கோவை மாவட்டம், ஆனைமலை அருகே உள்ள கோட்டூரை சேர்ந்தவர் பட்டீஸ்வரன் தேங்காய் உரிக்கும் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார்.
அப்பொழுது அவரது வீட்டின் அருகே இரண்டு வாலிபர்கள் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். இருவரையும் பார்த்து பட்டீஸ்வரன் ஏன் ? இங்கு நிற்கிறீர்கள். இங்கு இருந்து செல்லுங்கள் என தெரிவித்தார்.
அப்பொழுது அவர்களுக்குள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் அங்கு இருந்து சென்று விட்டனர். இந்நிலையில் மறுநாள் இரவு அங்கு வந்த இரண்டு வாலிபர்களும் மீண்டும் பட்டீஸ்வரனிடம் தகராறு ஈடுபட்டனர்.
ஜாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த இருவரும் அங்கு இருந்த இரும்பு கம்பியால் பட்டீஸ்வரனை கொடூரமாக தாக்கினர். அதில் அவருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
வலியால் அலறிய அவரை குடும்பத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஐந்து நாட்களுக்கு பின்பு சிகிச்சை முடிந்து பட்டீஸ்வரன் வீடு திரும்பினார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர் போலீசார் கொலை முயற்சி மற்றும் சாதிய வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கோட்டூர்புரம் பகுதியே சேர்ந்த சந்திரகுமார் மற்றும் முரளிதரன் முரளிதரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை ஜாதியை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் கோவை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி, விவேகானந்தன் வன்கொடுமை வழக்கில் சந்திரகுமார் மற்றும் முரளிதரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் வாதாடினார்.
Hindusthan Samachar / ANANDHAN