சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவு - உள்ளூர் சந்தையிலும் தாக்கம் எதிர்பார்ப்பு
சென்னை, 26 மார்ச் (ஹி.ச.) சர்வதேச வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 50 டாலர் சரிந்து 4,529 டாலராகப் பதிவாகியுள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் 74 டாலரிலிருந்து 71 டாலராகக் குறைந்துள்ளது
சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவு - உள்ளூர் சந்தையிலும் தாக்கம் எதிர்பார்ப்பு


சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)

சர்வதேச வர்த்தகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளன.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 50 டாலர் சரிந்து 4,529 டாலராகப் பதிவாகியுள்ளது.

அதேபோல், வெள்ளி விலையும் 74 டாலரிலிருந்து 71 டாலராகக் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் தொடர்ச்சியாகக் காணப்படும் இந்த சரிவு, உள்ளூர் சந்தையிலும் தங்க விலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன், தமிழகத்தில் மார்ச் 25ஆம் தேதி தங்க விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800 என்ற அளவில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM