ஏப்ரல் 6ஆம் தேதிபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
புதுக்கோட்டை, 26 மார்ச் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள நார்த்தமாலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்த
ஏப்ரல் 6ஆம் தேதிபுதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


புதுக்கோட்டை, 26 மார்ச் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள நார்த்தமாலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்திடும் வகையில், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அன்றைய தினம் பள்ளிகளில் ஏற்கனவே தேர்வுகள் இருந்தால், அவை திட்டமிட்டப்படி நடைபெறும் என்றம் அரசு பொதுத்தேர்வுகள் மாற்றமின்றி நடைபெறும என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விடுமுறை ஈடுசெய்யும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 18ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16ஆம் தேதி அன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும். இதன் மூலம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஏப்ரல் 4 (சனிக்கிழமை), ஏப்ரல் 5 (ஞாயிறு), ஏப்ரல் 6 (திங்கள் கிழமை) தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b