மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடிமக்களுக்கு ராம நவமி வாழ்த்து
கொல்கத்தா, 26 மார்ச் (ஹி.ச.) ராம நவமி, ''ராம நவராத்திரி'' என அழைக்கப்படும் ஒன்பது நாள் திருவிழாவின் இறுதி நாளில் நடைபெறும் ஸ்ரீராமபிரானின் பிறந்தநாள் ஆகும். இந்த ஒன்பது நாட்களிலும், அன்னை சக்தியின் ஒன்பது அவதாரங்களைப் புகழ்ந்து வழிபாடுகள் மே
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடிமக்களுக்கு ராம நவமி வாழ்த்து


கொல்கத்தா, 26 மார்ச் (ஹி.ச.)

ராம நவமி, 'ராம நவராத்திரி' என அழைக்கப்படும் ஒன்பது நாள் திருவிழாவின் இறுதி நாளில் நடைபெறும் ஸ்ரீராமபிரானின் பிறந்தநாள் ஆகும்.

இந்த ஒன்பது நாட்களிலும், அன்னை சக்தியின் ஒன்பது அவதாரங்களைப் புகழ்ந்து வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திருவிழா இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பக்தி சூழலில் கொண்டாடப்படுகிறது.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று குடிமக்களுக்கு ராம நவமி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில்,

ராம நவமி எனும் மங்களகரமான நன்னாளில் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

ராம நவமி கொண்டாட்டங்கள் அமைதியான முறையில், முழு வெற்றியுடன் நடைபெற என் அன்பான வாழ்த்துக்கள்.

அமைதி, வளம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை அனைவரும் பேணிக் காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

என்று குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / JANAKI RAM