தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 26 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானில
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்


சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் நாளை முதல் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

அதே போல், சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழகத்தில் நாளை வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.

Hindusthan Samachar / JANAKI RAM