Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 26 மார்ச் (ஹி.ச.)
கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவிடைமருதூர் வரை செல்லும் மினி பேருந்து பயணிகளுடன் அம்மாசத்திரம் அருகே சென்றுகொண்டிருக்கும் போது முன்னே சென்ற மினி பேருந்தை முந்தி செல்ல பின்னே வந்த மினி பேருந்து ஓட்டுனர் கவனக்குறைவுடன் தாறுமாறாக மினி பேருந்தை ஓட்டி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டிய மினி பேருந்து அதிவேகமாக வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்தை விட்டு வெளியே வந்து ஓட்டுனரை சரா மாறியாக திட்டி தீர்த்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கும்பகோணம் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிவேகத்தில் அதிக ஒலி எழுப்பி பொதுமக்களை அச்சுறுத்த வகையில் செல்லும் மினி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam