Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச)
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
டெல்லி பாஜக பிரித்து கொடுத்த தொகுதி பங்கீட்டு பட்டியலை திமுகவின் அழுத்தம் காரணமாக அதிமுக அலுவலகத்தில் வைத்து வெளியிட்டனர்.நேரடியாக மயிலாப்பூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக தலைமையில் கூட்டணி உள்ளது என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். தமிழ் மாநில காங்கிரஸ் இரட்டை இலையில் போட்டியிடவில்லை தாமரையில்தான் போட்டியிடுகிறது. அப்படி இருக்கையில் அவர்களின் கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என எப்படி ஏற்றுக்கொள்வது.
அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிக இடங்கள் கொடுப்பதாக திமுக குறித்து பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்படும் கதையாக உள்ளது. 2011 ஆம் ஆண்டு அங்கீகாரம் இல்லாத தேமுதிக கட்சிக்கு தான் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டது.
சென்னையில் வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல தெரிகிறது. வடசென்னை வளர்ச்சி திட்டம், தடை இல்லாமல் மின்சாரம், குடிநீர் விநியோகம், தனியார் பள்ளிகளுக்கு அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது, அரசு மருத்துவமனைகள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வடசென்னையை வாடாத சென்னையாக மாற்றியவர் முதலமைச்சர்.தென் சென்னை நோக்கி ஓடிக் கொண்டிருந்த மக்களுக்கு, வடசென்னையில் மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்தியவர் முதலமைச்சர்.
திமுக ஆட்சியில் 1479 கிலோமீட்டர் மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. 2021 பெருமழையில் சென்னை தத்தளித்தது.
திருப்புகழ் கமிட்டி அமைத்து மழைநீர் வடிகால் பணிகளை திறம்பட செயல்படுத்தியவர் முதலமைச்சர்.
மத்தியில் மோடி அரசேற்ற பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறித்து கோரிக்கை வைத்தாரா?
நீட் தேர்வு ரத்து குறித்து கோரிக்கை வைத்தாரா?
நீங்கள் பிரச்சாரத்தில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாக்கு சேகரிக்கிறீர்கள்.
அவர் குமரி ஆனந்தனின் மகள்.
ஜி கே வாசன் மூப்பனாரின் மகன்.
அவர்களெல்லாம் குடும்ப வாரிசு இல்லையா.?
அதற்கு பெயர் குடும்ப அரசியல் இல்லையா?
திமுக ஒட்டுமொத்த தமிழகத்தின் குடும்பம்.
வாரிசு அரசியல் பற்றி எடப்பாடி பழனிச்சாமி பேசுவதா? எடப்பாடி பழனிச்சாமி நேற்று பேசியது புலம்பலின் முழு வடிவம்.
எடப்பாடியின் தேர்தல் அறிவிப்புகள் அனைத்தும் 2021 இருந்து திமுக செயல் படுத்தி வரும் திட்டங்கள் தான். உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்.
என்ற வாக்கியத்தை சொன்னவர் கருணாநிதி அவர்கள்.
சொல்வதற்கு நாலு வார்த்தைகள் கூட சொந்தமாக தெரியாது சிந்தனை வலிமை இல்லாதவர் எடப்பாடி பழனிசாமி. பயத்தில் முன்கூட்டியே ஓட ஆரம்பித்திருக்கிற எடப்பாடி யார் அவர்களே,எங்களின் படை ஏற்கனவே தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து தெருக்களிலும் ஒன்றிணைவோம் தமிழ்நாடு என்ற தலைப்பிலும், வெல்லும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பிலும் மக்களிடம் ஊடுருவி இருக்கிறது.திமுக கூட்டணி அமித்ஷாவின் அடிமை கூட்டணி அல்ல.
சட்ட ஒழுங்கு பற்றி பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு எள்ளளவும் தகுதி இல்லை.
இந்த ஆட்சியில் ஜாதி மத மோதலில்லை.
பொள்ளாச்சி போல பாலியல் கொடுமைகள் இல்லை. குட்கா வழக்கில் யாரும் இந்த ஆட்சியாளரில் சிக்கவில்லை. சட்ட ஒழுங்கு பற்றி பேச எல்முனை அளவு கூட எதிர்க்கட் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தகுதியில்லை.
எங்கள் முதல்வர் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார்.
எங்கள் முதலமைச்சர் ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவித்துவிட்டார் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் வேட்பாளராக ஸ்டாலின் தான் என அறிவித்துவிட்டார்.
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு,
இந்த ஆட்சியில் தான் தைரியமாக பெண்கள் புகார் கொடுக்க முன் வருகின்றனர்.
சென்னையை கொச்சைப்படுத்துகிறார்கள், தற்குறிகள் ஆரமித்து வடசென்னையை கஞ்சா என்கிறார்கள்,போதை என்கிறார்கள்.
வருகின்ற தேர்தலில் அதற்கு பாடம் புகட்டபடும்.
வடசென்னை அமைதி பூங்காவாக உள்ளது.
கள்ள ஓட்டு போட்டு திமுகவின் கோட்டையாக சென்னையை வைத்திருந்தார்கள் இப்போது அந்த கோட்டையில் ஓட்டை விழுந்து விட்டது என அன்புமணி ராமதாஸ் நேற்று விமர்சனம் செய்திருந்தார்.
மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் விரும்பும் டார்ச் லைட் சின்னத்திலேயே அவர்கள் போட்டியிட வேண்டும் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார என்ற கேள்விக்கு,
அரசியல் முயற்சி பெற்றவர் திருமாவளவன் அவருடைய கோரிக்கைகளை முதலமைச்சர் கவனிப்பார்.
திமுக கூட்டணி நிர்பந்தத்தால் ஏற்பட்ட கூட்டணி அல்ல.
நிர்பந்தத்தால் உருவான கூட்டணி அமைச்சர் அலுவலகத்தில் உருவான கூட்டணி. என்றார்.
பெரம்பூரில் விஜய் போட்டியிடப் போவதாக தகவல் உள்ளது, என்ற கேள்விக்கு.
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எங்களுக்கு எதிரிகள் கிடையாது மக்களோடு மக்களாக இருப்பவர்களை மக்கள் விரும்புவார்களா?
அல்லது எப்போதாவது விருந்தினர் போல வந்து போபவர்களை மக்கள் விரும்புவார்களா? மக்கள் புரிந்து கொள்வார்கள் தியாகமா? வேடமா?தேர்தலுக்காகவா? நாட்டின் முன்னேற்றத்திற்காகவா?என மக்கள் சீர்தூக்கி பார்ப்பார்கள். எடைக்கலில் அதிக உயரத்தில் இருப்பவர் ஸ்டாலின் அவர்கள் தான்.
கடற்படை, காலாட்படை என திமுகவின் அனைத்து படைகளும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.எங்கள் முதலமைச்சர் தமிழகத்தின் நலனுக்காக டெல்லியிடம் ஒரு முறையேனும் வளைந்து கொடுத்துள்ளாரா?
யார் பாஜக காலில் விழுவது என்று எல்லோருக்கும் தெரியும்.
திமுகவை நம்பினால் நடு ரோட்டில் தான் நிற்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார், அதிமுகவை நம்பியவர்களில் நடுரோட்டில் நிற்பவர்கள் தான் அதிகம்.
தினகரன் சிபிஐ வழக்குகள் உள்ளது,
அன்புமணி ராமதாஸுக்கு வழக்கு உள்ளது.
அதனால் பாஜக கூட்டணியில் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ