Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஒவ்வொரு முடிவை எடுப்பதற்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் டெல்லிக்கு செல்வதை சுட்டிக்காட்டினார்.
பழனிச்சாமியின் நிலை இப்படியிருக்க
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை அடிமை கட்சியென பழனிச்சாமி விமர்சிப்பது அவசியமற்றது என சிவசங்கர் தெரிவித்தார்.
நிதிஷ்குமாருக்கு வந்த நிலைதான் அதிமுகவிற்கும் எதிர்காலத்தில் வரப்போவதாக எச்சரிக்கைவிடுத்த சிவசங்கர், திராவிட கட்சி என்று சொல்லப்படும் நிலையில் அதிமுகவுக்கு ஏற்படும் களங்கத்தை சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மோடியா? லேடியா?? என சவால் விடுத்த ஜெயலலிதாவின் ஆன்மாவையே எடப்பாடி பழனிச்சாமி சாகடித்திருப்பதாக அவர் விமர்சித்தார்.
மனமொத்த கூட்டணியாக திமுக கூட்டணி உள்ளது என்றும் திமுக தலைவர் வெற்றி பெற்று திராவிட மாடல் 2.0 ஆட்சி மீண்டும் தமிழகத்தில் ஏற்படும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
திமுகவை முந்திக்கொண்டு செயல்பட வேண்டும் என்பதாலேயே பிரசாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி இறங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
திமுக கூட்டணிக்குள் எந்த கருத்து மாறுபாடும் இல்லை என்றும் 23 கட்சிகள் கூட்டணியில் இருப்பதால் திமுக போட்டியிடும் இடங்கள் குறைந்த இருப்பதாகவும் சிவசங்கர் தெரிவித்தார்.
இந்தியாவில்,
சட்டம் ஒழுங்கு சீராக உள்ள மாநிலம் தமிழகம் என்று ஒன்றிய அரசே தெரிவித்திருப்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளை கேட்டு தேர்தல் அறிக்கை திமுக தரப்பில் சிறப்பாக வெளியாகும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேட்ட தொகுதிகள் அவருக்கு கிடைக்கவில்லை என்பதால், திமுகவை குறை கூறுவதாக கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ