Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 26 மார்ச் (ஹி.ச.)
செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் சந்திரன். இவர்
சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிபுணியம் கிராமத்தில் தங்கி நெல் அறுவடை இயந்திரம் ஓட்டும் டிரைவராக வேலை செய்து வந்ததார்.
இந்த நிலையில் 16 ம்தேதி அன்று செட்டி புண்ணியம் பகுதியில் நான்கு பேர்
சேர்ந்து சந்திரனின் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்தனர். தலை சேதமடைந்த நிலையில் உயிருக்கு போராடிய சந்திரன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக
உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சிங்கபெருமாள் கோவில் பகத்சிங் நகர் பகுதியை
சேர்ந்த அஜித், அவரது நண்பரான விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ், அமுல் விஜயகுமார் உள்ளிட்ட நான்கு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை நடந்து பத்து நாட்களுக்கு பிறகு சந்திரனை குடியிருப்பு பகுதிகள்
நிறைந்த மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நான்கு பேர் கொண்ட கும்பல்
மாறிமாறி சந்திரனின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யும் பரபரப்பு வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் விசாரணையில் சந்திரன் தான் வைத்திருக்கும் நெல் அறுக்கும் இயந்திரத்திற்கு எஸ்பி கோயில் அருகே உள்ள கடையில் பேட்டரி வாங்கி அதனை பயன்படுத்தி வந்த நிலையில் இந்த பேட்டரி பழுதான காரணத்தால் மீண்டும் இந்த கடைக்கு சென்று பேட்டரியை கொடுத்துவிட்டு பணத்தை கேட்டுள்ளார்.
அப்பொழுது இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றிய நிலையில் சந்திரன்
கடையை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக உரிமையாளர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சந்திரனை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam