Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 மார்ச் (ஹி.ச)
நாளை (மார்ச் 26) ராம நவமி கொண்டாடப்படும் நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ராம நவமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் இன்று எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
பாரத மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த ராமநவமி நல்வாழ்த்துகள்!
அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ராமரின் அவதாரம், நம் வாழ்க்கையில் சத்தியம், ஒழுக்கம், கருணை, நீதி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. அவரின் உயர்ந்த பண்புகள் எப்போதும் நம்மை நல்ல பாதையில் நடத்தட்டும்.
இந்நன்னாளில் அமைதி, மகிழ்ச்சி, நல்லெண்ணம் அனைத்தும் உங்கள் வாழ்வில் பெருகட்டும்.
ஜெய் ஸ்ரீ ராம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b