Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 26 மார்ச் (ஹி.ச.)
துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் ஒன்றான மகாகௌரி பற்றிய சிறப்பம்சங்களை பகிர்ந்து கொண்டு, மகாகௌரி அஷ்டமி நன்னாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தள கணக்கில்,
அன்னை மகாகௌரியின் திருவடிகளுக்குப் பல்லாயிரம் வந்தனங்கள்!
அன்னையின் தெய்வீக ஒளிக்கதிர், அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டுவந்து சேர்க்கட்டும்.
வெண்மையான காளையின் மீது அமர்ந்து, வெண்ணிற ஆடை தரித்து, தூய்மையின் வடிவமாகத் திகழும் அன்னை அவள். பரம்பொருளாம் சிவபெருமானை மகிழ்விக்கும் அந்த மகாகௌரி, அனைவருக்கும் மங்கலங்களை அருளட்டும்.
என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / JANAKI RAM