பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் காவடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்
கள்ளக்குறிச்சி, 26 மார்ச் (ஹி.ச.) ஆண்டுதோறும் பங்குனி மாதம் முருகன் கோவில்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோவில்களில் மட்டுமல்லாமல் ஆங்காங்கே உள்ள பல்
காவடி


கள்ளக்குறிச்சி, 26 மார்ச் (ஹி.ச.)

ஆண்டுதோறும் பங்குனி மாதம் முருகன் கோவில்களில் வெகு விமரிசையாக

கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு

அறுபடை வீடுகளில் உள்ள முருகன் கோவில்களில் மட்டுமல்லாமல் ஆங்காங்கே உள்ள

பல்வேறு கிராமங்களில் முருகன் கோவில்களிலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை

நிறைவேற அலகு குத்தியும் காவடி எடுத்தும் நேர்த்திக்கடன்

செய்வார்கள்.

இந்நிலையில் இந்த அடுத்த மாதம் 01 ஆம் தேதி பங்குனி உத்திர

திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு உளுந்தூர்பேட்டையில் 1008 காவடிகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடி என பல்வேறு

வடிவமைப்புகளில் காவடிகளை தயார் செய்து வருகின்றனர்.

இதனை

உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் திருநாவலூர்

சுப்பிரமணியர் கோவில்களில் தங்களது கோரிக்கைகளை வேண்டுதல்களாக முன்

வைத்தபக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக ஆர்வமுடன் வாங்கி

செல்வதற்கு முன்னரே காவடி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam