பெரம்பூரில் நடிகர் விஜயின் தேர்தல் பிரச்சாரம் - போலீசார் பாதுகாப்பு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்
சென்னை, 26 மார்ச் (ஹி.ச.) சென்னை பெரம்பூர் தொகுதியில் நாளை மறுதினம் தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தவெக சார்பில் முறையாக அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெள
TVK Vijay


TVK Vijay


சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)

சென்னை பெரம்பூர் தொகுதியில் நாளை மறுதினம் தவெக தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தவெக சார்பில் முறையாக அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பேசின் பாலம் பகுதியில் இருந்து பிரச்சாரம் தொடங்கி, வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் விஜய் பொதுமக்களிடம் பேச திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 3 ஆயிரம் பேர் கூடுவார்கள் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த பகுதியில் அதிகளவில் மக்கள் திரண்டால் பாதுகாப்பு சிக்கல் ஏற்படுமா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கூடுதல் கமிஷனர், இணை ஆணையர் மற்றும் துணை கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட இடத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி வழங்கும் பட்சத்தில், போலீசார் அடுத்த கட்டமாக பாதுகாப்பு திட்டம் எவ்வாறு அமல்படுத்துவது என்பது குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால், விஜய்க்கும் ரோடு ஷோ செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ