பாமக வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலையாரை தரிசித்த சௌமியா அன்புமணி..!
திருவண்ணாமலை, 26 மார்ச் (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள் திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையார
சௌமியா


திருவண்ணாமலை, 26 மார்ச் (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார்

திருக்கோவிலில் சமீப காலமாக அரசியல் பிரமுகர்கள் திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வருகின்றனர்.

அதன்படி பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணி மனைவியுமான சௌமியா

அன்புமணி தனது மகளுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சிறப்பு வழிபாடு செய்தார்.

அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்த சௌமியா அன்புமணி சம்மந்த விநாயகர் சன்னதியில் தரிசனம் செய்து, தொடர்ந்து அண்ணாமலையாரை தரிசித்தார்.

அப்போது

அவர் பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அண்ணாமலையார் சன்னதியில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார்.

அதனைத் தொடர்ந்து உண்ணாமுலை அம்மன் சன்னதிக்கு சென்று வழிபாடு செய்து நவகிரகங்களை வழிபட்டார். சௌமியா அன்புமணிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து கோவில்

சிவாச்சாரியார்கள் பிரசாதங்களை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் நீங்கள் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு சிரித்தபடி எந்த பதிலும் சொல்லாமல் சௌமியா மௌனமாக சென்றார்.

Hindusthan Samachar / GOKILA arumugam