Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 26 மார்ச் (ஹி.ச.)
புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும், விசிக 1 தொகுதிகள் என கூட்டணி உடன்பாடு அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதே தொகுதிக்கு காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மனு தாக்கல் செய்துதால் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த விவகாரத்தில் தி.மு.க தலைமை குழம்பி நிற்கிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைமையிடம் கேட்ட போது,
பிரண்ட்லி கண்டெஸ்ட் நட்பு உறவில் போட்டியென கோடி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலாப்பட்டு, ராஜ்பவன், நெல்லித்தோப்பு,மங்கலம், உழவர்கரை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை எதிர்த்து போட்டியிடுகிறது.
இதனால் தி.மு.க, விடுதலை சிறுத்தை கட்சி கடுமையான கோபத்தில் இருந்து வருவதால் கூட்டணி உடைகிறதா என கேள்வி? எழுந்துள்ளது.
மேலும் இந்த ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வாபஸ் பெற காங்கிரஸ் தலைமையிடம் தி.மு.க வலியுறுத்தி வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam