Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 26 மார்ச் (ஹி.ச.)
சேலம் பள்ளப்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிடும் சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், பாஜக அதிமுக தொகுதி பங்கீடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர்,
திமுக அதிமுக உடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது எனவும் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடக்கூடிய தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திமுக பாஜகவை எதிர்த்து தேர்தலை சந்திக்கக்கூடிய நிலையில், அவர்களுக்கு எளிதாக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கும் எனவும் இது இரு கட்சிகளுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் எனவும் தெரிவித்தார்.
அரை விழுக்காடு வாக்கு வங்கி உள்ள கட்சிகள் எல்லாம் திமுக அதிமுக என இரு கட்சிகளிடமும் பேரம் பேசி சீட்டும் நோட்டும் பெற்றுக் கொண்டு கூட்டணி அமைத்து வருவதாகவும், எட்டரை சதவீதம் வாக்குகளை பெற்றுக்கொண்டு எந்த கட்சியோடும் கூட்டணி வைக்காமல் நாதக மட்டுமே தனித்து களம் காணுவதாகவும் எனவே தனியாக வாக்கு வாங்கி இதுதான் என் சொல்லும் தகுதி நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே உள்ளது என்றும் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam