தமாக சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து நாளை அறிவிப்பு
சென்னை, 26 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தின் தற்போதைய எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர்,
தமாக சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து நாளை அறிவிப்பு


சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தின் தற்போதைய எதிர்க்கட்சியான அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோருடன் ஜி.கே. வாசன் நேற்று முன் தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை இறுதி செய்தார்.

இந்நிலையில், தமாக சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நாளை (மார்ச் 27) காலை 11.30 மணியளவில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜி.கே. வாசன் இன்று தெரிவித்துள்ளார். .

தமாக சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று (மார்ச் 26) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை வெளியிடப்படும் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b