உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 1,84,700 ரூபாய் பணம் பறிமுதல்
கரூர், 26 மார்ச் (ஹி.ச.) கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி கோட்டை சுங்கச்சாவடி அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து கன்னிவாடி நோக்கி சென்று கொண்டி
Seized


கரூர், 26 மார்ச் (ஹி.ச.)

கரூர் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி கோட்டை சுங்கச்சாவடி அருகே நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது தூத்துக்குடியில் இருந்து கன்னிவாடி நோக்கி சென்று கொண்டிருந்த tn69bh 4344 என்ற பதிவில் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வேலுச்சாமி என்பரை நிறுத்தி சோதனை செய்ததில்,

உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 96,000 ரூபாய் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் வீரமாத்தி அம்மன் கோவில் சோதனை சாவடி பகுதியில் பறக்கும் படை குழுவினர் வாகன சோதனையின் போது,

கன்னிவாடியில் இருந்து அரவக்குறிச்சி நோக்கி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சிவாஜி கணேசன் என்பவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 88,700 ரூபாயை பறிமுதல் செய்த அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்து பின்னர் அரவக்குறிச்சி சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN