தேர்தலை முன்னிட்டு தமிழக-கேரள எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்த திட்டம்
தென்காசி, 26 மார்ச் (ஹி.ச.) சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக-கேரள எல்லையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 2 மாநில அதிகாரிகள் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக ஆலோசனை நடத்தினர். அதாவது, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்
Tenkasi Collector Office


தென்காசி, 26 மார்ச் (ஹி.ச.)

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக-கேரள எல்லையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 2 மாநில அதிகாரிகள் வீடியோ கான்பிரன்ஸ் வழியாக ஆலோசனை நடத்தினர்.

அதாவது, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கேரளாவில் சட்டமன்ற தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்த இரு மாநிலங்களிலும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், சட்டமன்றத் தேர்தலின் போது தேர்தலை பாதுகாப்பாகவும், நேர்மையாகவும் நடத்திடும் வகையில், எல்லைப் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க இரு மாநில அதிகாரிகளும் முடிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கேரள மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகளும், தமிழக அதிகாரிகளும் பங்கு பெற்று இரு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தலின் போது இரு மாநில அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து பணியாற்றுவது குறித்தான பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, எல்லைப் பகுதிகளை முழுமையாகவும் கண்காணிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN