புதுச்சேரி த.வெ.க கூட்டணி கட்சியின் மனு தள்ளுபடி – பொது சின்னம் கோரிய நேயம் மக்கள் கழகத்திற்கு அனுமதி இல்லை
சென்னை, 26 மார்ச் (ஹி.ச.) புதுச்சேரியைச் சேர்ந்த நேயம் மக்கள் கழகத் தலைவர் நேரு என்கிற குப்புசாமி தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தரமாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கட்சியை பதிவு செ
Neyam


TVK Vijay


சென்னை, 26 மார்ச் (ஹி.ச.)

புதுச்சேரியைச் சேர்ந்த நேயம் மக்கள் கழகத் தலைவர் நேரு என்கிற குப்புசாமி தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தரமாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், கட்சியை பதிவு செய்ய முன்பே விண்ணப்பித்திருந்தாலும், வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரம் முடிந்த பிறகே கட்சி பதிவு செய்யப்பட்டதாக மனுவில் கூறப்பட்டது. எனவே, கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிந்த பிறகே கட்சி பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மனுதாரர் தற்போது பொது சின்னம் கோர முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது. அடுத்தடுத்த தேர்தல்களில் மனுதாரர் பொது சின்னம் கோரிக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதனைத் தொடர்ந்து, மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ