Enter your Email Address to subscribe to our newsletters

கோரக்பூர், 26 மார்ச் (ஹி.ச.)
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இன்று கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயில் வளாகத்தில் பொதுமக்களுடன் நேரடியாக சந்திப்பு நடத்தும் வகையில் ‘ஜனதா தர்ஷன்’ நிகழ்ச்சியை முன்னெடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகள் மற்றும் குறைகளை முதல்வரிடம் நேரடியாக விவரித்தனர்.
முதல்வர் அவற்றை தீர்ப்பதற்கான தேவையான அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வராக பொறுப்பேற்றது முதல், இதே மாதிரியான ‘ஜனதா தர்ஷன்’ நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இதனைத் தொடர்ந்து, இன்று ஒரே நாளில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் இந்தியாவின் 71வது ‘மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்கள்’ (STPI) மையத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
இந்த மையம் மாநிலத்தின் டிஜிட்டல் மற்றும் ஸ்டார்ட்அப் சூழலை மேம்படுத்தும் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / JANAKI RAM