Enter your Email Address to subscribe to our newsletters

கள்ளக்குறிச்சி, 26 மார்ச் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி மாவட்டம் மையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆல்பர்ட்
அந்தோனிராஜ், இவர் உளுந்தூர் பேட்டையில் உள்ள ஏ ஆர் எஸ் டிராவல்ஸ் நடத்திவரும்
ராஜா என்பவர் மூலம் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வதற்காக 3,73,000 லட்சம் பணத்தைக் கட்டியுள்ளார்.
ராஜா என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக
டூரிஸ்ட் விசாவில் அனுப்பிய நிலையில், பாதியிலேயே திரும்பி வந்து அவரிடம் தான்
கட்டிய பணத்தை கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்கு ராஜா என்பவர் ஆல்பர்ட் அந்தோணி ராஜ்ஜியை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆல்பர்ட் அந்தோணி ராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தும்
நடவடிக்கை எடுக்காத நிலையில், எஸ்பி அலுவலகத்திற்கு விசாரணைக்கு சென்றதாக
கூறப்படுகிறது.
அப்பொழுது தனக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரும்பு ஜூஸில் விஷம் கலந்து குடித்து
விசாரணைக்கு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய நபர் மீது
நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூலி தொழிலாளி கரும்பு ஜூஸில் விஷம் கலந்து
குடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் உயிரிழப்பதற்கு முன்பதாக விஷம் கலந்து குடித்து விவரத்தை வீடியோவாக
வெளியிட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam