Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 26 மார்ச் (ஹி.ச)
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் வேட்புமனுக்கள் 514 தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து 24-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. 2 தொகுதிகளில் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்றும் தொடர்ந்தது. பரிசீலனையில் மொத்தம் 411 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 103 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
ஏ மற்றும் பி படிவங்கள் இல்லாததால் காங்கிரஸ், திமுகவினர் மனுக்களும் சில இடங்களில் தள்ளுபடியானது.
வேட்பு மனுக்களை இன்று (மார்ச் 26) வாபஸ் பெறலாம்.
இன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / vidya.b