காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விரைவில் முழு குணமடைய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, 26 மார்ச் (ஹி.ச) காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடந்த மார்ச் 24 ஆம் தேதி இரவு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து சோனியா காந்தியின் உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும், அச்சப்பட
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விரைவில் முழு குணமடைய வேண்டும் -  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து


சென்னை, 26 மார்ச் (ஹி.ச)

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடந்த மார்ச் 24 ஆம் தேதி இரவு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் தொடர்ந்து சோனியா காந்தியின் உடல் நிலையை கண்காணித்து வருவதாகவும், அச்சப்படும் அளவிற்கு எதுவும் இல்லை என கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

டெல்லியில் நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக சோனியா காந்திக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி நலமுடன் வீடு திரும்ப வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் இன்று கூறியிருப்பதாவது,

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து கவலையடைந்தேன்.

திருமதி சோனியா காந்தி அவர்கள் மிக விரைவில் மீண்டும் நல்ல உடல்நலத்தைப் பெறுவார் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

அவர் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b