Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)
அண்ணா பல்கலையில் படிக்கும் மாணவி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று
(மார்ச் 26) மாலை அளித்த புகார் மனுவில், அண்ணா பல்கலை பேராசிரியர் ஒருவர் தனக்கு நேரடியாகவும், செல்போனில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் இதனை வெளியே சொன்னால் தொலைத்து விடுவேன் என அவர் மிரட்டியதாகவும் தனக்கு மட்டுமல்ல, கல்லூரியில் தன்னுடைய தோழிகள் சிலருக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் கூறியிருந்த அந்த மாணவி இது தொடர்பாக அண்ணா பல்கலை கமிட்டியிடம் புகார் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்ட மாணவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில், அபிராமபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணையை துவக்கினர். இதனிடையே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவ, மாணவிகள், பல்கலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மாணவியின் புகார் பேரில் அண்ணா பல்கலை பேராசிரியர் ஞானவேல் பாபு இடைநீக்கம் செய்து தற்போது பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. துறைரீதியான விசாரணை நடை பெற்று வரும்நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b