Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூர், 27 மார்ச் (ஹி.ச)
கர்நாடக மாநிலம் பெங்களூரு பீனியா எச்.எம்.டி. லே-அவுட் பகுதியில் வசித்து
வருபவர் சாயா. இவருக்கு திருமணமாகி
கணவரும் ஒரு மகனும் உள்ளனர்.
இந்தநிலையில் சாயாவுக்கு திருமணமான
மல்லேகவுடாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக பழகிய இவர்களின் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
சாயாவும் மல்லேகவுடாவும் பல்வேறு இடங்களுக்கும், சாயாவின் வீட்டில் ஆள்
இல்லாதபோதும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இவர்களது
கள்ளக்காதல் குறித்து மல்லேகவுடாவின் மனைவி யமுனா(வயது 36) என்பவருக்கு
தெரியவந்தது.
தனது கணவருடனான கள்ளக்காதலை கைவிடும்படி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனை கேட்க மறுத்த கணவர், சாயாவுடனான கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த யமுனா தனது தம்பியான சுதீப்(34) என்பவரை அழைத்து
கொண்டு, சாயாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு சென்ற யமுனா, சாயாவிடம் தனது கணவருடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே. இதனை பார்த்து கொண்டிருந்த சாயாவின் 16 வயது மகன் வீட்டுக்குள் சென்று அரிவாள் ஒன்றை எடுத்து வந்தார். பின்னர் அந்த அரிவாளால் யமுனாவை சரமாரியாக வெட்டினார். இதை தடுக்க வந்த சுதீப்பையும் அவர்
வெட்டினார். இந்த கொடூர தாக்குதலில் பலத்த காயமடைந்த 2 பேரும் ரத்த
வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பீனியா
போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட 2 பேரின்
உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.
மேலும் இரட்டை கொலையை செய்துவிட்டு தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட
சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும்
ஏடுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam