உத்தரகாண்ட்டில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி,பலர் படுகாயம்
டேராடூன், 27 மார்ச் (ஹி.ச.) உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில், பவாலி அருகே இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர். குபி கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த
உத்தரகாண்ட் பவாலியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி, பலர் காயம்


டேராடூன், 27 மார்ச் (ஹி.ச.)

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில், பவாலி அருகே இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

குபி கிராமம் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து மாநில பேரிடர் மீட்புப் படையின் உதவி ஆய்வாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இன்று காலை சுமார் 7.30 மணியளவில் பவாலி சாலையில் பேருந்து கவிழ்ந்ததாக தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு பணியாளர்கள், காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / JANAKI RAM