பைக்கில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 1.40 லட்சம் பணம் பறிமுதல்
விழுப்புரம், 27 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் துணை ராணுவப்
Seized


விழுப்புரம், 27 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வருவாய் துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் துணை ராணுவப் படை ஆகியோரை கொண்ட 126 பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 23 இடங்களில் சூழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்புதுப்பட்டு என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த எசலாம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் புஷ்பராஜ் என்பவரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

சோதனையின் போது எந்தவிதமான ஆவணமும் இன்றி ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் பணத்தை புஷ்பராஜ் வைத்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் விசாரித்த போது தனியார் நிதி நிறுவனம் வழங்கிய கடனை சம்மந்தப்பட்ட நபர்களிடம் இருந்து வசூலித்து செல்வதாக புஷ்பராஜ் தெரிவித்தார்.

இருப்பினும் அந்த பணத்திற்கு எந்தவிதமான ஆவணமும் இல்லாத காரணத்தால் தனியார் நிதி நிறுவன ஊழியர் புஷ்பராஜ் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள செஞ்சி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனிடம் ஒப்படைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN