மாற்றுத் திறனாளிகள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு -காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
சென்னை, 27 மார்ச் (ஹி.ச.) மாற்றுத் திறனாளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில ப
High court


சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)

மாற்றுத் திறனாளிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த வழக்கில் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி தாக்கல் செய்த மனுவில், ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீதிபதி நிர்மல் குமார், சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க சென்னை எழும்பூர் காவல்துறை உதவி ஆணையர் ஜெகதீசன் மற்றும் ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

மேலும், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களை இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் மேலான விசாரணையை அடுத்த மாதம் 21ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ