காரைக்கால் மீனவர்கள் 25 பேருக்கு வருகின்ற 31ஆம் தேதி வரை சிறை காவல் நீட்டிப்பு
புதுச்சேரி, 27 மார்ச் (ஹி.ச.) காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந
Fishermen


புதுச்சேரி, 27 மார்ச் (ஹி.ச.)

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்து 25 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருந்தது.

இந்த நிலையில் சிறை காவல் முடிந்து 25 மீனவர்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதில் வருகின்ற 31ஆம் தேதி வரை சிறைக் காவல் நீட்டிப்பு செய்து இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து மீனவர்கள் 25 பேரையும் சிறைக்கு அழைத்து செல்ல உள்ளனர்

Hindusthan Samachar / ANANDHAN