Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சிராப்பள்ளி, 27 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முன்னோட்டமாக,
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி (NTK) சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ராஜேஷ்.
இன்று மாவடி குளம் ஏரியில் மண்டிக்கிடந்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியில் பங்கேற்று தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களுடன் உரையாற்றிய அவர்,
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தி.மு.க தலைமையைக் கடுமையாக விமர்சித்தார்.
ஏரியைச் சுத்தப்படுத்தும் விதமாக பல மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டும், அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிய நிலையில், ராஜேஷின் இந்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Hindusthan Samachar / JANAKI RAM