வருவாயைப் பொருட்படுத்தாது மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் பிரதமர் மோடி அரசு - நயினார் நாகேந்திரன்
சென்னை, 27 மார்ச் (ஹி.ச) பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து விலை உயர்வைத் தடுத்திருப்பது மிகுந்த வரவேற்பிற்குரியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்
Nainar


Gs


சென்னை, 27 மார்ச் (ஹி.ச)

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்து விலை உயர்வைத் தடுத்திருப்பது மிகுந்த வரவேற்பிற்குரியது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

மத்திய கிழக்கு நாடுகளின் போரால் முன்னேறிய நாடுகளே 30% வரை பெட்ரோல் விலையை உயர்த்திய நிலையில், நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு இன்று வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, தற்போது அவற்றின் மீதான கலால் வரியையும் குறைத்து விலை உயர்வைத் தடுத்திருப்பது மிகுந்த வரவேற்பிற்குரியது.

டீசல் மீதான கலால் வரியை மொத்தமாக நீக்கியதோடு, ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான கலால் வரியை ₹10 குறைத்திருக்கும் இந்த சீரிய நடவடிக்கையால், எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் விலை உயரும் அபாயத்திலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

வரி குறைப்பினால் அரசுக்கு வருவாய் இழப்பு நேரிடும் ஆபத்திருந்தும், பாரத மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்தி, மக்களை விலை உயர்விலிருந்து காக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், ஒரு சிறந்த தலைமைக்கான எடுத்துக்காட்டு என்பதில் எந்த சந்தேகமுமில்லை!

Hindusthan Samachar / P YUVARAJ