Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மார்ச் (ஹி.ச)
தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள பொதுஅறிவிப்பில்,
தமிழக முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி கிடைத்து வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான Indian Oil Corporation Limited (IOCL), Bharat Petroleum Corporation Limited (BPCL) மற்றும் Hindustan Petroleum Corporation Limited (HPCL) ஆகியவை அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் எரிபொருளை தொடர்ந்து விநியோகம் செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், தேவைக்கு அதிகமாக எரிபொருள் நிரப்புவதால் தேவையற்ற பதற்றம் ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் வழக்கம்போல தங்களின் அன்றாட தேவைக்கு ஏற்ப மட்டுமே எரிபொருள் நிரப்புமாறும் தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் நம்பகமான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்ய அனைத்து டீலர்களும், எண்ணெய் நிறுவனங்களும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ