Enter your Email Address to subscribe to our newsletters

புதுக்கோட்டை, 27 மார்ச் (ஹி.ச.)
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அக்கினி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
இந்த தகவலையடுத்து கறம்பக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ்பாபு தலைமையிலான போலீசார்
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காக்கைக்கோன்தெரு அருகே வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தைச் சோதனையிட முயன்றனர்.
போலீசாரைக் கண்டதும் அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர், அதனை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடினார்.
அதனை தொடர்ந்து, அந்த வாகனத்தைச் சோதனையிட்டதில், அதில் சுமார் ஒரு யூனிட் மணல் சட்ட
விரோதமாக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கறம்பக்குடி அரங்குளம் மஞ்சுவயல் பகுதியைச் சேர்ந்த
முத்துச்சாமியின் மகன் கவிபாலன் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மணலுடன் கூடிய வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீசார், அதனை காவல்
நிலையம் கொண்டு வந்தனர்.
தப்பியோடிய கவிபாலன் மீது வழக்குப் பதிவு செய்துள்ள
போலீசார், அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெறுதாகவும் இது தொடர்பாக புகார் அளித்தும் போலீசாரும் அரசு அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மணல் கொள்ளை தொடர்ந்து நீடித்தால் மண்வளம் நீர் வளம் அனைத்தும் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்வது கேள்விக்குறியாகும் என கவலை தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் கனிமவள கொள்ளையை இருப்பதற்கு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam