Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 27 மார்ச் (ஹி.ச)
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தந்தையும் மகனும் காவல்துறையால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் நீதிபதி முத்துக்குமரன் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிப்பதாகக் கூறினார்.
மார்ச் 30-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர்,உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோரின் நன்னடத்தை மற்றும் மனநலன் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட முதலாவது அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 9 காவலர்களின் மனநலன் குறித்த பரிசோதனை மேற்கொள்ள அரசு இராஜாஜி மருத்துவமனையின் தனி வார்டு உருவாக்கப்பட்டு அவர்களுக்கு மனநல சோதனை நடத்தப்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN