உள்ளூர் மொழி திரைப்பட வளர்ச்சிக்கு உத்தரகாண்ட் அரசு ரூ.2 கோடி மானியம் அறிவிப்பு
டேராடூன், 27 மார்ச் (ஹி.ச.) உத்தரகாண்ட் மாநிலம், உள்ளூர் மொழிகளில் திரைப்படத் தயாரிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ரூ.2 கோடி வரை மானியம் வழங்கும் புதிய திரைப்படக் கொள்கையை அறிவித்துள்ளது. இந்த முயற்சியை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பாராட்டியுள்ளார்
உள்ளூர் மொழி திரைப்பட வளர்ச்சிக்கு உத்தரகாண்ட் அரசு ரூ.2 கோடி மானியம் அறிவிப்பு


டேராடூன், 27 மார்ச் (ஹி.ச.)

உத்தரகாண்ட் மாநிலம், உள்ளூர் மொழிகளில் திரைப்படத் தயாரிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் ரூ.2 கோடி வரை மானியம் வழங்கும் புதிய திரைப்படக் கொள்கையை அறிவித்துள்ளது.

இந்த முயற்சியை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பாராட்டியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் தாமி தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில்,

படைப்பாற்றல் மற்றும் கலாச்சார வளத்தை மேம்படுத்த எங்கள் அரசு உறுதியாக செயல்படுகிறது.

புதிய திரைப்படக் கொள்கையின் கீழ், உள்ளூர் மொழி திரைப்படங்களுக்கு ரூ.2 கோடி வரை மானியம் வழங்கப்படும்.

இந்த திட்டம் உள்ளூர் கலைஞர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரிய செல்வம் மற்றும் கலாச்சாரத்தை உலகளாவிய அளவில் எடுத்துச் செல்லும் இந்த முயற்சி, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் உதவும்.

என தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், முதலமைச்சர் தாமி தலைமையிலான அமைச்சரவை, உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான மானியத்தை உயர்த்தும் புதிய திரைப்படக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM