Enter your Email Address to subscribe to our newsletters

அயோத்தி, 27 மார்ச் (ஹி.ச.)
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று
(மார்ச் 27ம் தேதி) ராம நவமி விழா கோலாகலமாக துவங்கியது.
இதையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
பால், தயிர், நெய், தேன், இளநீர், தண்ணீர், சந்தனம் மூலம் பால ராமருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
56 வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டன.
மஞ்சள் நிற ஆடை, தலையில் வைரங்கள் பதிக்கப்பட்ட தங்க கிரீடம், கையில் தங்க வில், அம்புடன் பால ராமர் காட்சியளித்தார்.
14 அர்ச்சகர்கள் வேத மந்திரங்களை ஓதினர். அதிகாலை 5 மணி முதலே அயோத்தி ராமர் கோயிலின் பூஜை, வழிபாடுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் தொலைக்காட்சி, இணையதளம், செயலிகள் வாயிலாக சுவாமியை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
மதியம் 12 மணிக்கு பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி திலகமிடப்பட்டது.
அப்போது சுமார் 4 நிமிடங்கள் வரை பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி பாய்ந்தது.
இன்று அதிகாலை 3:30 மணிக்கு பிரம்ம முஹூர்த்தத்தின் போது, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ராமரை தரிசனம் செய்து வந்தனர்.
கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது போல, நேரடியாக ஸ்ரீ ராமர் உருவச்சிலை மீது பட்டது பக்தர்களை பரவசப்படுத்தியது.
ஜன்ம ஆரத்தி மற்றும் சூரிய திலகம் சூரியனின் கதிர்கள் ராம்லாலாவின் நெற்றியில் ஒளிரும் அற்புத காட்சி நடைபெற்றது.
பெருந்திரளான பக்தர்கள் ராம்லல்லாவின் தரிசனம் கண்டு பரவசமடைந்தனர்.
ஸ்ரீ ராமர் ஜன்மோத்சவ் கொண்டாட்டம் அயோத்தி நகரம் முழுவதும் பெரிய திரைகளில் ஒளிபரப்பப்பட்டது.
இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
Hindusthan Samachar / vidya.b