காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு
சென்னை, 27 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் முதற்கட்டமாக, 16 தொகுதிகளின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 16 த
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு


சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் முதற்கட்டமாக, 16 தொகுதிகளின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 12 தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என திமுக தலைமை கூறியுள்ளது.

அதனை காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. மற்ற 12 தொகுதிகளில் தொடரும் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது,

திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது.

நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். ஐந்து தொகுதிகள் குறித்து மீண்டும் பேசி முடிவெடுப்போம்.

தென்காசி மற்றும் விருத்தாச்சலம் தவிர 16 தொகுதிகளை மீண்டும் நாங்கள் திரும்ப பெற்றுள்ளோம்.

ஈரோடு கிழக்கு ஏற்கெனவே நாங்கள் நின்ற தொகுதி, அதனால் அதை நாங்கள் திரும்ப பெற்றுள்ளோம்.

கன்னியாகுமரியில் நாங்கள் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறோம்.

அதில் ஒன்றை கேட்கிறார்கள்.

இது குறித்து அகில இந்திய தலைமையிடம் பேசியுள்ளார்கள்.

அது எங்களுடைய சிட்டிங் தொகுதி என்பதால் அதைக் கொடுப்பது கடினம். ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எங்கள் வேட்பாளருக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது.

அதனால் அது குறித்து முதல்வரிடம் பேசி இப்பிரச்சினையை தீர்ப்போம். வேட்பாளர் அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும்

என்று அவர் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் பின்வருமாறு:

1) பொன்னேரி (தனி)

2) வேளச்சேரி

3) சோளிங்கர்

4) ஸ்ரீபெரும்புதூர் (தனி)

5) ஈரோடு கிழக்கு

6) உதகை

7) மயிலாடுதுறை

8) அறந்தாங்கி

9) காரைக்குடி

10) சிவகாசி

11) திருவாடனை

12) ஸ்ரீவைகுண்டம்

13) நாங்குநேரி

14) குளச்சல்

15) கிள்ளியூர்

16) விளவங்கோடு

என முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b