இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை, 27 மார்ச் (ஹி.ச) தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5, ஐஜேகேவுக்கு 2 தொகுதிகள், புரட்சி பாரதம்,
இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிப்பு


சென்னை, 27 மார்ச் (ஹி.ச)

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகாவுக்கு 5, ஐஜேகேவுக்கு 2 தொகுதிகள், புரட்சி பாரதம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகத்துக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஐஜேகே போட்டியிடும் பல்லாவரம் தொகுதியில் வழக்கறிஞர் டாக்டர் வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த கட்சியின் சட்ட ஆலோசகராக உள்ளார்.

குன்னம் தொகுதியில் சரண்யா அன்பழகன் போட்டியிடுகிறார். இருவருமே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b