த.மா.கா-வில் வேட்பாளர்கள் தேர்வு - ஜிகே வாசன் அறிவிப்பு
சென்னை, 27 மார்ச் (ஹி.ச.) தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்க
த.மா.கா. வேட்பாளர்கள் பட்டியல் - ஜிகே வாசன் அறிவிப்பு


சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகா 5 , ஜான் பாண்டியனின் ஐஜேகேவுக்கு 2, தமமுகவுக்கு 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் இன்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து, வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டார்.

அதன்படி, ஒட்டன்சத்திரத்தில் விடியல் சேகர், ஈரோடு மேற்கில் யுவராஜா, ராணிப்பேட்டையில் கார்த்திகேயன், கிள்ளியூரில் நிதின் சைமன், கும்பகோணத்தில் அசோக் குமார் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சைக்கிள் சின்னம் கிடைக்காததால் பாஜகவின் நேரடிக் கூட்டணியில் இருக்கும் நிலையில், தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமாகா 6 இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b