தொகுதி களம் காணுவதை உறுதி செய்தார் - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி, 27 மார்ச் (ஹி.ச.) கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், போர் சூழல் நேரத்திலும் கூட மத்திய அரசு பெட்ரோல் ட
நயினார் நாகேந்திரன்


கன்னியாகுமரி, 27 மார்ச் (ஹி.ச.)

கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,

போர் சூழல் நேரத்திலும் கூட மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளதாகவும் இதே போல் தமிழக அரசும் வரியை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் பொன்ராஜ் பேசிய கருத்து குறித்து பதிலளித்த அவர்,

பெண்களை இழிவாக பேசும் திமுகவினர் மீது தமிழக முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மதிப்பிற்குரிய அண்ணாமலை தேர்தலில் நிற்பது தொடர்பாக தலைமை முடிவு செய்யும் என்றும் பதிலளித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வேறு ஏதும் கட்சிகள் வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு,

தற்போது கருத்து கூற முடியாது எனவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு என்பது பரஸ்பரம் பேசி முடிவு செய்யப்பட்ட ஒன்று என்ற அவர் சில மாவட்டங்களில் அவர்களுக்கு அதிகமாக தொகுதிகளை கொடுத்துள்ளோம் தொகுதிகள் எங்களுக்கு அதிகமாக கிடைத்துள்ளது என்றார்.

யார் வெற்றி பெற்றாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்ற நயினார், தற்போது இருக்கும் முதல்வர் மக்களை பற்றி கவலை கொள்ளாமல் 5 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினையை மட்டுமே பார்த்துக் கொண்டு வந்ததாக சாடினார்.

தாம் இம்முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam