சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை - 4 நாட்கள் மதுபான கடைகள் மற்றும் பார்களை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு
சென்னை, 27 மார்ச் (ஹி.ச.) தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.23ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாகவும், வாக்கு எண்ணிக்கை நாளன்று மதுபான கடைகளை மூட வேண்டும் என்று இந்த
Tasmac Protest


சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.23ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாகவும், வாக்கு எண்ணிக்கை நாளன்று மதுபான கடைகளை மூட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 21,22 மற்றும் 23ம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4 ம் தேதியும் மதுபான கடைகள் மூடப்படும்.

இதன்படி, இந்த 4 நாட்களும், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை மூடப்படும்.

மேலும், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும்.

மேலும், பீர் மற்றும் மது தயாரிப்பு நிறுவனங்கள் மது விற்பனை மற்றும் மாநிலத்தில் மது பாட்டில்களை வாகனத்தில் கொண்டு செல்வது என அனைத்தையும் தடை செய்வதற்கான உரிய உத்தரவுகளையும் அறிவிக்கப்பட உள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ