Enter your Email Address to subscribe to our newsletters

ஆந்திரா, 27 மார்ச் (ஹி.ச.)
ஆந்திர மாநிலம்
அனந்தபுரம் மாவட்டம், யாதிகி மண்டலத்தின் கொனுப்பலபாடு கிராமத்தை சேர்ந்த போய
கோவிந்து மற்றும் லட்சுமி கண்டம்மா தம்பதியருக்கு மூன்று மகள்களும்,
ஹேமச்சந்திரா ( 7 ) என்ற மகனும் உள்ளனர்.
நிட்டூர் கிராமத்தைச் சேர்ந்த
சர்வேஷ் என்பவரை மூத்த மகள் லலிதா காதலித்ததால் அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
உல்லாச வாழ்க்கைகு அடிமையாகி,
பணத்திற்காக தனது மாமியார் வீட்டார் மற்றும் மனைவியை துன்புறுத்தி அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், யுகேஜி படித்து வந்த லலிதாவின் தம்பி ஹேமச்சந்திரா, யாடிகியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குச்
சென்று படித்து வந்தான். புதன்கிழமை மதியம் 1.30 மணிக்கு பள்ளிக்கு சென்ற
ஹோமந்திராவை யாருக்கும் தெரியாமல் தனது பைக்கில் அழைத்துச் சென்றான்.
பின்னர் பள்ளிக்கு சென்ற தனது மகன் வீட்டிற்கு வராததால் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பள்ளியில் இருந்து செல்லும்போது சர்வேஷ் தனது முகத்தில் கைக்குட்டையைக் கட்டி ஹோமசந்திராவை அழைத்து சென்றதால் அடையாளம்
தெரியாத நபர் சிறுவனைக் கடத்திவிட்டதாக அனைவரும் நினைத்து, யாதிகி காவல்
நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஹேமச்சந்திராவை காணவில்லை என்று
குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களும்
சேர்ந்து எதுவும் தெரியாதது போல் சர்வேஷ் அந்த நேரத்தில் காவல் நிலையத்திற்கு
சென்றான். ஹோமசந்திரா எங்கே இருக்கிறான் என்று தெரியாததால், சிசிடிவி
காட்சிகளின் அடிப்படையில் போலீசார் சர்வேஷ் மீது சந்தேகம் கொண்டனர்.
வியாழக்கிழமையன்று அவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது,
ஹேமச்சந்திராவைத் தானே கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்த தகவலின்
அடிப்படையில், சிந்தலையபள்ளி - குண்டங்கோட்டா மலைப்பாதை அருகே உள்ள ஒரு குன்றில் ஹோமசந்திரா உடல் கண்டெடுக்கப்பட்டது.
கற்களால் ஹேமச்சந்திராவைக்
கொன்ற சர்வேஷ், உடல் யாருக்கும் தெரியாமல் இருக்க பெரிய பாறாங்கற்களால் உடலை
மூடியிருந்தார்.
ஹோமசந்திரா தந்தை கோவிந்துவின் புகாரின் பேரில் போலீசார்
வழக்கு பதிவு செய்து சர்வேஷ்சை கைது செய்தனர்.
தன் சகோதரனைக் கொன்ற சர்வேஷும்
அதேபோலக் கொல்லப்பட வேண்டும் என்று அவரது மனைவி லலிதா போலீசாரிடம் கேட்டு
கொண்டார்.
பணம் கொடுக்காவிட்டால் ஒவ்வொருவரையும் கொன்றுவிடுவதாக சர்வேஷ் அவ்வப்போது கூறியதாகவும் ஆனால் உண்மையிலேயே இப்படி செய்வான் என்று நினைத்து கூட பார்க்கவில்லை பெற்றோர் கண்ணீர்விட்டு அழுதார்.
Hindusthan Samachar / GOKILA arumugam