Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 27 மார்ச் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என்பது அக்கட்சித் தொண்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து
வருகிறது.
இதற்காகப் பல்வேறு களப்பணிகளை பாஜகவினர் மேற்கொண்டு வந்த நிலையில், என்.டி.ஏ.
(NDA) கூட்டணியில் பழனி தொகுதி அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டது.
இந்த அறிவிப்பால் ஆத்திரமடைந்த பாஜக நகர தலைவர் ஆனந்தகுமார் தலைமையில்
தொண்டர்கள், இன்று பழனி பா.ஜக அலுவலக சாலையில் திரண்டு நூதன போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கை நிறைவேற வேண்டிச் சாலையில் தேங்காய்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் உச்சகட்டமாக, பாஜக அலுவலகத்தின் மாடியில் நின்றிருந்த தொண்டர் ஒருவர், பழனி தொகுதியை பாஜகவிற்கே ஒதுக்க வேண்டும், இல்லையென்றால் கீழே குதித்து தற்கொலை செய்வேன் என மிரட்டல்
விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஆவேசமடைந்த தொண்டர்கள் சாலையில் அமர்ந்து மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாங்கள் பல மாதங்களாகக் கடுமையாகக் களப்பணி
ஆற்றினோம், ஆனால் எங்களை ஏமாற்றிவிட்டனர்.
எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை
போராட்டத்தைத் தொடர்வோம்.
என அவர்கள் தலைமைக்கு கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் போலீசார் அவர்களிடம் சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam