கள்ளக்குறிச்சியில் சுற்றி சுழன்று பிரச்சாரம் செய்த நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான்..!
கள்ளக்குறிச்சி, 27 மார்ச் (ஹி.ச.) கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரமேஷ் பெருவழுதியை ஆத
சீமான்


கள்ளக்குறிச்சி, 27 மார்ச் (ஹி.ச.)

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடைபெற்ற தேர்தல்

பிரச்சாரத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து

கொண்டு, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரமேஷ் பெருவழுதியை ஆதரித்து திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பேசிய அவர்,

மற்ற கட்சிகளைப் போல அண்டா, குண்டா என இலவசங்களை வழங்க மாட்டேன் என்றும் கல்வி,

மருத்துவம், குடிநீர் – இந்த மூன்று மட்டுமே மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாட்டை குறிப்பிட்டு, “நாம் ஆட்சிக்கு

வந்தால் மாட்டு சாணம், கோழி கழிவு, இலைக் கழிவுகள் மூலம் தயாரிக்கும் இயற்கை

எரிவாயுவை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவோம் என்று உறுதி அளித்தார்.

அத்துடன், தனியார் மருத்துவமனைகளின் தரத்தையும் அரசு மருத்துவமனைகளின்

தரத்தையும் ஒப்பிட்டு பேசிய அவர், “நீங்கள் நடத்தும் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை தரமாக உள்ளது; ஆனால் அரசு

மருத்துவமனைகள் அதே தரத்தில் இல்லை” என்று குற்றஞ்சாட்டினார்.

வாக்குக்கு பணம் வழங்குவது குறித்து விமர்சித்த அவர், “ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்கு வாங்குபவன் மக்களுக்கு சேவை செய்வான் என்று எப்படி நம்ப

முடியும்?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், நல்ல ஆட்சி என்றால் கல்வி, வேலை, அதற்கேற்ற சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றார். இலவச திட்டங்கள் ஏமாற்றுத் திட்டங்களாக மாறிவிட்டதாகவும் நாட்டை கடனில் ஆழ்த்தி இலவசங்கள் வழங்கப்படுவதாகவும் சாடினார்.

இறுதியாக, பாடல் பாடியும் உற்சாகமாக பேசிக்கொண்டும், வேட்பாளர் ரமேஷ் பெருவழுதியுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam