Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 27 மார்ச் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரதூர், சாத்தமங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.
இந்நிலையில் தற்போது நெல் கொள்முதல் பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நெல்
கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஐம்பதாயிரம்
மூட்டைகளுக்கு மேல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
நிரந்தரமான மேற்கூரையுடன்
கூடிய பாதுகாப்பான நெல் சேமிப்பு கிடங்கு இல்லாத நிலையிலும், நெல் சேமிப்பு
கிடங்குகளுக்கு ஏற்றிச் செல்ல வாகனங்கள் பற்றாக்குறை காரணமாகவும் நெல்
மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
இவை ஒரு மாதத்திற்கு மேலாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் நெல் மூட்டைகள் வெப்பம் அதிகரித்து சாக்குகள் மக்கி போய் நெல் மணிகள் நிறம் மாறி பல மூட்டைகள் கிழிந்து வருகின்றன.
மேலும் தொடர்ந்து நெல்லின் ஈரப்பதம் குறைவும் ஏற்பட்டு வருவதால் நெல்லை பாதுகாப்பதற்கான போதுமான
தட்பவெட்ப நிலையும் இருப்பதில்லை எனவும் இதனாலும் நெல் மணிகள் சேதம் அடைவதாகவும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இப்பகுதிகளில் வாகன பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்வதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டு வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும்
இப்பகுதியில் எதிர்பாராமல் பெய்யும் மழையின் காரணமாக மேலும் நெல் மணிகள் சேதம்
அடைகின்றன.
Hindusthan Samachar / GOKILA arumugam