Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 மார்ச் (ஹி.ச.)
ஸ்ரீ ராம நவமி என்பது மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ஸ்ரீ ராமர் பிறந்த தினத்தை நினைவுகூரும் ஒரு புனிதமான இந்துப் பண்டிகையாகும்.
இது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் வளர்பிறை ஒன்பதாம் நாளில் (நவமி திதி) நாடு முழுவதும் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ ராம நவமியின் முக்கியத்துவம்:
அவதார நோக்கம் - தீமையை அழித்து அறத்தை (தர்மத்தை) நிலைநாட்டவே ராமர் அவதரித்தார்.
சிறந்த மனிதர் - தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று வாழ்ந்தவர் மற்றும் ஏக பத்தினி விரதத்தைக் கடைப்பிடித்தவர்.
ஆன்மீக பலன் - இந்நாளில் ராம நாமத்தைச் சொல்வது விஷ்ணு சகஸ்ரநாமம் முழுவதையும் பாராயணம் செய்த பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.
கொண்டாடப்படும் முறைகள்:
வழிபாடு - அதிகாலையில் நீராடி, இல்லங்களில் ராமரின் திருவுருவப் படத்திற்கு மலர் சூட்டி, தீப தூப ஆராதனைகள் செய்வார்கள்.
விரதம் - பக்தர்கள் நாள் முழுவதும் விரதமிருந்து, ராமாயணப் பாடல்களைப் பாடியும், ராம நாமத்தை ஜபித்தும் இறைவனை வழிபடுவார்கள்.
கோவில் தரிசனம் - அயோத்தி மற்றும் பத்ராசலம் போன்ற முக்கிய ராமாயணத் தலங்களிலும், அனைத்து ராமர் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் ரத யாத்திரைகள் நடைபெறும்.
பிரசாதம் - பொதுவாக நீர் மோர் மற்றும் பானகம் (வெல்லம், ஏலக்காய் கலந்த நீர்) பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம்.
ராமபிரான் காட்டிய நேர்மை, பொறுமை மற்றும் கடமை உணர்வை நம் வாழ்வில் கடைப்பிடிக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
Hindusthan Samachar / JANAKI RAM