Enter your Email Address to subscribe to our newsletters

லக்னோ, 27 மார்ச் (ஹி.ச.)
உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள செக்டர் 76 மெட்ரோ நிலையம் அருகே அமைந்துள்ள ‘விஷால் மெகா மார்ட்’ வணிக வளாகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து நொய்டா தலைமைத் தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமார் கூறியது,
செக்டர் 49 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த வளாகத்தில் அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தீப்பற்றி எரிந்தது.
தீ வேகமாகப் பரவியதால் கட்டிடம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
தீ அணைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / JANAKI RAM